Go to Design --> Edit Html and find these sentences. Now replace these sentences with your own welcome message. This templates is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com. Download this template and more premium blogger templates from Premiumbloggertemplates.com.

நெடுந்தீவு

Blogger news

  • SLIDE-1-TITLE-HERE

    Replace these every slide sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com [...]

  • SLIDE-2-TITLE-HERE

    Replace these every slide sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com [...]

  • SLIDE-3-TITLE-HERE

    Replace these every slide sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com [...]

  • #

    #

Saturday, August 13, 2011

Posted by Admin On 2:02 PM

இதோ எம் கண்முன்னே கனவுகள் இறந்து கிடக்கின்றன

விந்தையான விஞ்ஞான உலகிலே மனிதர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள் நாமோ பின்னேயே தரித்து நிற்கிறோம். உலகத்தோடும் அண்மித்த பிரதேசங்களில் வாழும் மனிதர்களோடும் போட்டி போட்டு வாழ வேண்டிய தேவை இருப்பதோடு நெடுந்தீவின் வளர்சியிலும் பொருளாதார உயர்சியிலும் கட்டாயமாக முன்னேற்றம் காணப்படவேண்டிய காலப்பகுதியில் நாம் நிறுத்தப்பட்டுள்ளோம்.
01 கல்வி
யாழ்குடாநாட்டின் முதற் பெரும் பாடசாலைகளோடு போட்டி போட்டு நல்ல பெறுபேறுகளை பெற்றார்கள் நமது பிரதேசத்தில் கல்வி கற்ற மாணவர்கள். ஆனால் அதன் நிலை இப்போது மாற்றமடைந்து வருகின்றது. கடந்த காலங்களில் நம் பிரதேச மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியிருக்கிறார்கள் இப்போது அதன் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாடசாலை கல்வியை மாத்திரம் நம்பியிராமல் மாணவர்களுக்கு கட்டாயமான மாலை நேர வகுப்புகள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும் நெடுந்தீவை பொறுத்த வரை தற்ப்போது தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இல்லாதது மிகப்பெரிய குறையே ஆயினும் அதை நிவர்தி செய்வதற்கு சமூக நிறுவனங்கள் ஒன்று பட்டு ஒத்துழைக்க வேண்டும். என்பதோடு மழைக்கு முழைத்த காளான் போல் பரீட்சைக் காலங்களில் மட்டும் வகுப்புக்ளை நடாத்தாது விடுமுறை காலங்களிலும் வகுப்புக்கள் நடாத்தப்பட வேண்டும் தற்போது ஆங்கில கற்க்கைநெறியும் கணணிக்கற்கை நெறிகளும் வழங்கப்பட வேண்டிய தேவையும் அத்தியாவசியமானது
02 பொருளாதாரம்
பொருளாதாரம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லுவார்கள். நெடுந்தீவை பொறுத்தவரை பெரும்பாலானோரின் பொருளாதாரம் இயற்கை வழங்களை நம்பியதாகவே காணப்படுகின்றது. இயற்கை வழங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் மட்டுமே பயன் தருவதால் மீதிக்காலங்களை வெறுமனே கழிக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் வெளிய+ர் வியாபாரிகளின் வருகையால் உள்ளுர் வியாபாரிகள் அமுக்கப்படுவதோடு வேலை இல்லாப்பிரச்சனையும் அதிகரிக்கின்றது. மேலும் நெடுந்தீவில் பல இளைஞர்களும் யுவதிகளும் வேலையில்லாமல் இருப்பது யாவரும் அறிந்த உண்மையே இவற்றை சீர்செய்து சுய தொழில் வாய்ப்பு வசதிகளை வழங்க அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வராதது வேதனைக்குரியதே இனிவரும் காலங்களிலாவது இவை சீர்செய்யப்படுமாக இருந்தால் ஒரளவேனும் நம்பிக்கையோடு வாழ்க்கையை முன்னெடுக்கலாம்
03 விதவைகள்
அரசின் அண்மித்த தகவலின் படி யாழ் குடாநாட்டில் 45 ஆயிரம் விதவைகள் இனங்கானப்பட்டுள்ளனர். இதில் கணிசமானவர்கள் நமது பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்துகின்றனர். இவர்கள் நீண்ட பயனடையக்கூடிய எந்த வேலைகளையும் அரசோ அரச சார்பற்ற நிறுவனந்களோ இதுவரை முற்றுமுழுதாக செய்து முடிக்கவில்லை என்றே கூறவேண்டும். ஆடு ஒன்றையோ அல்லது கோழிக்கூடுகளையோ வழங்குவதோடு மட்டும் தமது பணிகளை தக்கவைத்துக் கொள்கிறார்கள். இதனை மாற்றி நமது பிரதேச மக்களுக்கு விதவைகள் பற்றிய வெளிப்பாடும் அவர்கள் நீண்ட பயனடையக்கூடிய ஆரம்பக வேலைகளையாவது அவசரமாக செய்வேண்டிய தேவையும் இருப்பது குறிப்பிடத்தக்கது
04 மதுபானம்
பொதுவாக இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் மதுபானச்சாலைகள் காணப்படுகின்றன.அது நெடுந்தீவிலே தற்ப்போது காணப்படாதது பெருமைக்குரிய விடையமே ஆயினும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் பலர் நமது பிரதேசத்தில் தொடர்ந்தும் வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மதுபானத்தின் விலை அதிகரிப்பு அதற்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு பெரும் நெருக்கடியையே கொடுத்து வருகிறது. சாதாரன பயணியும் மதுபானத்தை வியாபாரமாக மேற்கொள்ளுவது முறைமாறான செயலாகவே அவதானிக்கப்படுகின்றது. இருந்தாலும் மதுபான வியாபாரத்தின் பின்னனியில் இருக்கும் குடும்பங்கள் இதைமட்டுமே நம்பி இருப்பதால் அவர்களின் நிலையும் கவலைக்கிடமானதே
05 மின்சாரம்
உலகமே தற்போது மின்சாரமயமாகிவிட்டது. ஆனால் நெடுந்தீவில் அது பிரதான வீதியை அண்டிய குடி இருப்புகளுக்கே பெரிதும் பானைக்கு உட்ப்படுத்தப்படுகின்றது. நெடுந்தீவின் ஒட்டு மொத்த மக்களின் மின்சார தேவைகளை நிறைவேற்றக் கூடிய அளவிலான மின்சார இயந்திரம் இருந்தும் அது முற்று முழுதாக எல்லா மக்களையும் இன்னும் சென்றடையவில்லை மண்னெண்ணை லாம்போடும் கை விளக்குகளோடும் நமது பிரதேசத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கையில் வீதிகளில் மின் குழிழ் ஒளிர்ந்து கொண்டிருப்பது நியாயமானதா..
06 போக்குவரத்து
சீரான போக்குவரத்து இல்லாத பிரதேசம் அபிவிருத்தியில் பின்னோக்கியே செல்லும் சரியான பாதுகாப்போடும் சரியான நேரத்திற்கும் தற்போது போக்குவரத்து இடம்பெறுவதாக அறிய வருகின்றது எனினும் சீரான போக்குவரத்து இல்லாதது நமது பிரதேசத்துக்கு பின்னடைவே எதிர் வரும் காலங்களில் இன்நிலை தொடருமா என்பது கேள்விக்குறியே
07 நன்நீர்
புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில் நெடுந்தீவின் பிரதேசத்தின் பாறை அமைப்பு - நில அமைப்பு உட்குழிவான தட்டையாகும் இத் தோற்றப்பாடு பொருத்தமான வடிகல் அமைப்புகளின் மூலம் நன்னீரை தேக்கி வைக்க சாதகமானது. எனினும் இது தொடர்பான திட்டமிடல்கள் செயற்பாடுகள் போதிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே கவலைக்குரிய விடையமாகும். நீர் நிலைகளை பழுதுபார்பதோடு அல்லாமல் தொடர்சியான பராமரிப்பும் வேண்டப்படுகின்றது. இதன் மூலம் நன்னீர் முதல்களை உவர் நீராதலில் இருந்து குறிப்பிட்ட அளவேனும் மட்டுப்படுத்த முடியும். மேற்க்காட்டப்பட்ட நடைமுறைகள் குடி நீர் பிரச்சனைக்கு தீர்வாக அமைவதோடு விவசாய முன்னெடுப்புகளுக்கும் இன்றியமையாததே

Friday, August 12, 2011

பெருக்கு மரம்

Posted by Admin On 1:24 PM

பெருக்கு மரம்

பெருக்கு மரம் இதுவும் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்டதேயாகும். அவர்களால் கொண்டு வரப்பட்ட குதிரைகளின் தீனி (உணவு)க்காக கொண்டு வந்து நாட்டப்பட்டதாகும். இந்த மரமானது எமது தீவிற்கு வரும் வெளியிடத்தைச் சேர்ந்தவர்களின் மனதைக்கவரும் வகையில் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. 10 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாகவும் நடுப்பகுதி குகைபோன்றும் காணப்படுகின்றது.

 இதுஎமது மாவிலித்துறையின் பழமையான தோற்றம் "மாவிலி" என்ற பெயர் வரக்காரணம் "மா" என்பது குதிரை ஆகும் குதிரைகளை வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்து இறக்கிய இடமாகையால் இப்பெயர் வந்தது.